மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

செவிலியர், அன்னையர் தினம்: தமிழ் கிறிஸ்தவர்கள் ரத்த தானம்

உலக செவிலியர் தினம் மற்றும் அன்னையர் தினத்தையொட்டி  தில்லி ஹோஸ்காஸ் சகோதயா தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

Updated On :13 மே 2013, 12:56 am IST

உலக செவிலியர் தினம் மற்றும் அன்னையர் தினத்தையொட்டி  தில்லி ஹோஸ்காஸ் சகோதயா தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

வழிபாட்டுக்கு வரும் தமிழ் கிறிஸ்தவ செவிலியர்கள் 13 பேர் ஒத்துழைப்புடன் நடைபெற்ற முகாமை, தேவாலயத்தின் அருள்தந்தை தேவசகாயராஜ் ரத்த தானம் அளித்துத் தொடக்கிவைத்தார்.

இறையியல் கல்வி நிலையப் பொறுப்பாளர் அருள்தந்தை ஆரோக்யதாஸ், தில்லியின் பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் மங்கை, மலர், விமலா, ஜாக்குலின், பார்வதி, கிரேசி, தமிழ் கத்தோலிக்க மறைபணி அமைப்பைச் சேர்ந்த டேவிட், ஜோசப்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வழிபாட்டுக்கு வந்த கிறிஸ்தவர்கள் உள்பட 40 பேர் ரத்த தானம் செய்தனர். தானமாக வழங்கப்பட்ட ரத்தம், எய்ம்ஸ் மருத்துவமனை ரத்த வங்கியில் ஒப்படைக்கப்பட்டது.

செவிலியர்களுக்குப் பெருமை சேர்த்த புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளான மே 12-ஆம் தேதி உலக செவிலியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. மே 12 உலக அன்னையர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

அதையொட்டி, தமிழ் கத்தோலிக்க கிறிஸ்தவ மறைபணி மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை இணைந்து இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.