தில்லியில் உள்ள சிவாஜி ஸ்டேடியம் அருகே இறந்து கிடந்த இளைஞரின் சடலத்தை போலீஸார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து போலீஸார் வியாழக்கிழமை கூறியது: தில்லி கனாட் பிளேஸில் உள்ள சிவாஜி ஸ்டேடியத்துக்கு வெளியே இளைஞர் இறந்து கிடப்பதாகத் வழிப்போக்கர்கள் கடந்த வாரம் சனிக்கிழமை காலையில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். சுமார் 40 வயது மதிக்கத்தக்க அவரது உடலில் முகம், கை, கால்கள் உள்பட பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் உடல் சிதைந்திருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாராவது இருப்பார்களா என்று விசாரிக்கப்பட்டது. ஆனால், யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது மார்புப் பகுதியில் பச்சை குத்தப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.