தலைநகர் தில்லியில் செவ்வாய்க்கிழமை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. இதனால் தில்லிவாசிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மதிய நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. நகரத்தின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வெயிலின் அளவு 40 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவானது.
இது கடந்த 5 ஆண்டுகளில் பதிவான வெப்ப நிலையை விட அதிகமாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயிலுடன் சேர்ந்து புழுக்கத்தின் அளவும் அதிகமாக இருந்ததால் வியர்வையால் மக்கள் அவதிப்பட்டனர்.