Enable Javscript for better performance
கார் திருட்டு: 5 பேர் கும்பல் கைது- Dinamani

சுடச்சுட

    

    தில்லி, தலைநகர் வலயப் பகுதிகளில் கார்களை திருடும் கும்பலைச் சேர்ந்த 5 பேரை தில்லி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து 4 கார்கள் மீட்கப்பட்டன.இது குறித்து தில்லி காவல் துணை ஆணையர் (மேற்கு) ரண்வீர் சிங் கூறியது: தில்லி, தலைநகர் வலயப் பகுதிகளில் கார்கள் திருட்டு தொடர்பாக புகார்கள் பெறப்பட்டுவந்தன. இதைத் தொடர்ந்து, அக் கும்பலைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந் நிலையில், தில்லியை சேர்ந்த குர்பிரீத் சிங் தனது கார் திருட்டுப் போனதாக கடந்த 25-ஆம் தேதி திலக் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அக் காரில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து, போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. அதில் தொழில்நுட்ப உதவியாளர்களும் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் தீவிரமாகக் கண்காணித்து காரின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்தனர். அந்த கார் உத்தர பிரதேச மாநிலம், கெயின்ரான் கிராமத்தில் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, தனிப் படையினர் அப் பகுதியில்  கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினர். அப்போது அந்த கார் அருகே மூவர் வந்தனர். அதில் ஒருவர் போலீûஸ கண்டதும் தப்பியோட முயன்றார்.

    அவரைப் பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, கார் திருடும் கும்பலைச் சேர்ந்த அஸீம் கான், உஸ்மான், நீரஜ், ராகுல் மற்றும் அந்தக் காரை வாங்குவதற்காக வந்திருந்த ஷாயிதாப் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஷாயிதாப் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். தில்லியில் மெக்கானிக்காக இருந்து வருகிறார். திருட்டுப் போன 4 கார்கள் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டன.

    இதில் குர்பிரீத் சிங்கின் காரும் அடங்கும். இவரது காரில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருந்ததால்தான் காரின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க உதவியாக இருந்தது என்று ரண்வீர் சிங் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai