Enable Javscript for better performance
சன்லைட் காலனி மாரியம்மன் கோயில் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    தில்லி ஆஷ்ரம் பகுதியில் சன்லைட் காலனியில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் 49-ஆம் ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    திருவிழாவையொட்டி, ஸ்ரீ மாரியம்மன் அழைத்தல் நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.

    செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) காலை 7 மணி முதல் 9 மணிக்குள் கும்பம் அழைத்து வந்து பூச்சாற்றுதல் நடைபெறும். ஏப்ரல் 2-இல் மாலை 3 மணிக்கு பூக்குழி பூஜை, மாலை 5 மணிக்கு அரண்மனை முத்து, மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.

    ஏப்ரல் 3-இல் அதிகாலை 2 மணிக்கு அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி, 4 மணிக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை, 5 மணிக்கு மாவிளக்கு, அலகு குத்துதல், பூங்கரக ஆட்டம், வான வேடிக்கை நடைபெறும். காலை 6 மணிக்கு மின் விளக்கு பொருத்திய பூ அலங்காரத்துடன் கூடிய ரதத்தில் பஞ்சலோக அம்மன் சிலை ஊர்வலம் நடைபெறும். காலை 8 மணிக்கு பூங்கரக ஆட்டம், புலி வேஷ ஆட்டம், சிறப்பு பூ மிதித்தல் நிகழ்ச்சி நடைபெறும். ஏப்ரல் 4-ஆம் தேதி காலை 8 மணிக்கு அம்மனின் கும்ப கலசம் யமுனை நதிக்குக் கொண்டுச் செல்லப்பட்டு, நண்பகல் 12 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும்.

    திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகக் குழுத் தலைவர் எஸ். சங்கர், செயலாளர் கே. அசோக், பொருளார் டி. நடராஜன், துணைத் தலைவர் ஏ. ராஜா, துணைச் செயலாளர் ஆர். சிங்காரவேலு, துணை பொருளாளர் எஸ்.கே. வெங்கடேஷ், உறுப்பினர்கள் ஆர். ரமணி, எஸ். அருண் சுப்பிரமணி உள்ளிட்டோர் செய்துள்ளனர் என்று கோயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai