Enable Javscript for better performance
சோம்நாத் பார்தி மீது நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் வெளிநாட்டினர் வசிக்கும் பகுதியில் குடியிருப்பில் சட்டவிரோதமாக சோதனை செய்த விவகாரத்தில், தில்லி முன்னாள் சட்டத் துறை அமைச்சர் சோம்நாத் பார்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தினார்.

    இது குறித்து அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:

    "தில்லி சட்டத் துறை அமைச்சராக இருந்த போது சோம்நாத் பார்தி, கிர்க்கி விரிவாக்க பகுதியில் தங்கியிருந்த ஆப்பிரிக்க நாட்டினர் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் சோதனை நடத்தினார். அங்கிருந்த நைஜீரிய நாட்டு பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகக் கூறி அவர்களை வலுக்கட்டாயமாக மருத்துவ சோதனைக்கும் உள்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

    தில்லி அமைச்சராக இருந்தபோதும், மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள தில்லி போலீஸýக்கு அவர் நேரடியாக உத்தரவிட முடியாது. ஆனால், பாதுகாப்புக்காக சென்ற போலீஸாரிடம் நைஜீரிய பெண்களைக் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். ஆனால், முறையான ஆணை இல்லாததால் அதற்கு போலீஸார் உடன்படவில்லை.

    இந்த விவகாரத்தில் முறைப்படி சம்பந்தப்பட்ட துறை செயலாளரிடம் சோம்நாத் பார்தி புகார் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், இவரே போலீஸ்போல செயல்பட முயற்சித்து அத்துமீறி குடியிருப்புப் பகுதியில் சோதனை நடத்தியுள்ளார். இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கடவுளுக்கு நிகராக மதித்து வரவேற்க வேண்டும் என்ற பண்பாட்டை நாம் கொண்டுள்ளோம். ஆனால், அதை மதிக்காமல் சட்டவிரோதமாக செயல்பட்ட சோம்நாத் பார்தி மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார் சுப்பிரமணியன் சுவாமி.

    தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு: இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே தன்னிச்சையாக விசாரணை மேற்கொண்டுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், சோம்நாத் பார்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு தில்லி போலீஸாருக்கு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

    இதே விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவர் அளித்த புகாரின் பேரில் ஏற்கெனவே தில்லி நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டு அவற்றின் விசாரணை நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai