Enable Javscript for better performance
ஜூன் 8-இல் கைலாசம்- மானசரோவர் யாத்திரை- Dinamani

சுடச்சுட

    

    கைலாசம்- மானசரோவர் யாத்திரை பயணம் வரும் ஜூன் 8-ஆம் தேதி தொடங்கும் என்று இந்திய-திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து இந்திய-திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகள் தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: ஹிந்துக்களின் புனிதப் பயணமான கைலாசம்-மானசரோவர் யாத்திரை ஆண்டு தோறும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த ஆண்டுக்கான யாத்திரை வரும் ஜூன் 8-ஆம் தேதி தொடங்கப்படும். வெளியுறவுத் துறை சார்பில் 18 குழுக்கள் என, ஒவ்வொரு குழுவுக்கும் 60 பேர் என்ற அங்கீகரிக்கப்பட்ட யாத்ரிகர்கள் மட்டுமே கைலாசம்-மானசரோவர் செல்ல முடியும்.

    பயணத் கட்டணத்தை செலுத்திய யாத்ரிகர்கள், மருத்துவப் பரிசோதனைகள் உள்ளிட்ட நடைமுறைகளுக்காக தில்லிக்கு வர வேண்டும். அது முடிவடைந்ததும் ஜூன் 12-ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலம் காத்கோதம் மற்றும் அல்மோரா நகரங்களுக்கு அவர்கள் அழைத்துச்  செல்லப்படுவர். அங்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

    யாத்ரிகர்களுக்கான பயணம், பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்திய-திபெத்திய எல்லை காவல் படையின் 7-வது படையணி (பட்டாலியன்) மேற்கொண்டுள்ளது. பயணத்தையொட்டி,  கைலாசம், மானசரோவர் பகுதிகளுக்கு சிறப்பு மருத்துவக் குழு வரும் மே மாத இறுதியில் அனுப்பி வைக்கப்படும். இந்த யாத்திரை செப்டம்பர் 9-ஆம் தேதியுடன் நிறைவடையும்' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai