Enable Javscript for better performance
டிரக் மோதி போலீஸ்காரர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் டிரக் மோதியதில் போலீஸ்காரர் இறந்தார்.

    சனிக்கிழமை இரவு நிகழ்ந்த இந்த விபத்து குறித்து போலீஸார் கூறியது: தில்லி காவல் துறையில் போலீஸ்காரராகப் பணியாற்றியவர் அஜிந்தர் சிங் (25). பாரத் நகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

    இந் நிலையில், வடமேற்கு தில்லி, மாடல் டவுனில் தனது நண்பருடன் மார்க்கெட்டிற்கு சென்றிருந்தார். அங்கிருந்து ஸ்கூட்டியில் இருவரும் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது குருத்வாரா நானக் செüக் அருகே பின்னால் வந்த டிரக் மோதியது.

    இதில் அஜிந்தர் சிங் சம்பவ இடத்திலேயே இறந்தார். வாகனத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட அவரது நண்பர் லேசான காயங்களுடன் தப்பினார். அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    விபத்து நடந்தவுடன் டிரைவர் ரிங்கு (35) தப்பிச் செல்வதற்காக டிரக்கை வேகமாக ஓட்ட முற்பட்டுள்ளார். அதற்குள் அவரை அப் பகுதியில் இருந்தவர்கள் பிடித்து அடித்து,  உதைத்தனர். பின்னர் போலீஸில் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்ப்பட்டுள்ளது. டிரைவர் குடிபோதையில் டிரக்கை ஓட்டி வந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது என்று என்று போலீஸார் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai