Enable Javscript for better performance
தமிழக தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    தமிழக தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு

    By புது தில்லி  |   Published on : 01st April 2014 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை சார்பில் கடந்த 8 மாதங்களில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அத் துறையின் இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து அந்த அலுவல கம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை - பெங்களூர்ó தொடர் தொழில் வளாகத்தைப் போல கொச்சி-கோவை-திருப்பூர்; சென்னை - விழுப்புரம் - கடலூர் - திருச்சி - மதுரை - சிவகங்கை; திருநெல்வேலி - கன்னியாகுமரி - திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜப்பானிய சர்வதேச வளர்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டம், நாங்குனேரியில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை புதுப்பொலிவுடன் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    திருச்சியில் பாரத் மிகுமின் நிறுவனத்திற்கு (பெல்) உபபொருள்கள் தயாரித்து வழங்கும் சிறு மற்றும் குறுதொழில் நிறுவனங்கள் தொழில் வளாகம் அமைக்க ரூ. 102 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டம் ரூ. 90 கோடியில் தொடங்கப்பட்டுள்ளது. சிவகங்கையில் ரூ. 20 கோடியில் நறுமணப் பொருள்கள் தொழில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    மதுரையில் வணிகர்கள் பயன்பெறும் வகையில், ரூ. 40 கோடியில் உணவு பொருள்கள் சேமிப்பு வளாகம் தொடங்கப்பட்டுள்ளது. சிங்கம்புணரியில் ரூ. 7 கோடியில் தென்னை நார் தொழில் வணிக வளாகம் திறகப்பட்டுள்ளது.

    உப்புத் துறை வளர்ச்சி பணிகள்: உப்புத் தொழில் மேம்பட "மகாத்மா காந்தி உப்பு சத்யாகிரக திட்டம்' ஏற்படுத்தப்பட்டு உப்புத் துறை நிலங்களை மாற்றியமைத்து, பயன்பாட்டில் இல்லாத நிலங்களை மத்திய அரசின் மற்ற துறைகளுக்கு வழங்கி நிலத்தையும் பயன்படச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, அத்திப்பட்டில் எண்ணூர் துறைமுகத்துக்கு 734.64 ஏக்கர் நிலமும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு 100 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 450 கோடி மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது.

    அறிவுசார் மேல்முறையீட்டு மையம்: வெளிநாடுகளில் அதிக முக்கியத்துவமுள்ள அறிவுசார் மேல்முறையீட்டு அமைப்பு, சென்னையில் பழைய வாடகைக் கட்டடத்தில் இயங்கிவருகிறது. இதற்கு சுமார் ரூ. 100 கோடியில் வளாகம் அமைக்க சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

    சிவகங்கையில்..: சிவகங்கை மற்றும் காரைக்குடியில் தொடங்கப்பட்ட ஐஏஎஸ் பயிற்சி மையங்களில் 200 மாணவ, மாணவிகள் தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர்.

    இருதய அறுவை சிகிச்சை, புற்று நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 30 பேருக்கு பிரதமர் நிவாரண நிதியின் மூலம் ரூ. 52 லட்சம் பெற்றுத்தரப்பட்டுள்ளது அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai