Enable Javscript for better performance
திடீர் ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து நெரிசல்- Dinamani

சுடச்சுட

    

    திடீர் ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து நெரிசல்

    By புது தில்லி  |   Published on : 01st April 2014 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தெற்கு தில்லி கர்பாலா மசூதி நில விவகாரம் தொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற முஸ்லிம்களின் திடீர் ஆர்ப்பாட்டம் காரணமாக தில்லியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் தாற்காலகமாக மூடப்பட்டன. இதனால், அலுவலகம் செல்வோர் காலையில் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.

    இது தொடர்பாக தில்லி போக்குவரத்து காவல்துறையின் சிறப்பு ஆணையர் தாஜ் ஹசன் கூறுகையில், "இந்த ஆர்ப்பாட்டத்தால் நொய்டாவையும் தில்லியையும் இணைக்கும் டிஎன்டி மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.

    ஆஸ்ரம், ரிங் ரோடு, நிஜாமுதீன் உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. காலையில் அலுவலகம் தொடங்கும் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகனங்கள் சாலையில் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதைச் சமாளிக்கப் போக்குவரத்து போலீஸார் பிற பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்டனர். பின்னர் போக்குவரத்து நெரிசல் சீர் செய்யப்பட்டது' என்றார்.

    இரண்டு மெட்ரோ நிலையங்கள் மூடல்: இந்த ஆர்ப்பாட்டத்தை ஒட்டி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜோர் பாக், ஐஎன்ஏ ஆகிய மெட்ரோ நிலையங்கள் தாற்காலிகமாக மூடப்பட்டன.

    இது தொடர்பாக தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் உயர் அதிகாரி கூறுகையில், "ஜோர் பாக் பகுதியில் சிறுபான்மையினர் ஆர்ப்பாட்டத்தில் அதிகம்பேர் திரள வாய்ப்புள்ளதாகவும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், ஜோர்பாக், ஐஎன்ஏ மெட்ரோ நிலையங்களை காலை 10.40 மணி முதல் தாற்காலிமாக மூட தில்லி போலீஸார் கேட்டுக் கொண்டனர். 

    இதையடுத்து, ஜோர் பாக், ஐஎன்ஏ ஆகிய இரு மெட்ரோ நிலையங்களும் தாற்கலிமாக மூடப்பட்டன' என்றார்.

    இதற்கிடையே, கர்பாலா மசூதி நில விவகாரம் தொடர்பாக தில்லி ஜோர் பாக் பகுதியில் திங்கள்கிழமை போராட்டம் நடத்த காஜியாபாத் பகுதியில் உள்ள ஷியா பிரிவு முஸ்லிம் சமுதாயத்தினர் திட்டமிட்டனர். இதனால், காஜியாபாத்-தில்லியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை நுழைவுப் பகுதியில் போக்குவரத்தை உத்தர பிரதேச போலீஸார் தடை செய்தனர்.

    இதேபோல, தில்லியில் இருந்து உத்தர பிரதேச மாநில எல்லையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியை தில்லி போலீஸார் முன்னெச்சரிக்கையாக அடைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai