Enable Javscript for better performance
விகாஸ்புரி குடியிருப்பில் பெட்டிக்குள் பெண் சடலம்- Dinamani

சுடச்சுட

    

    விகாஸ்புரி குடியிருப்பில் பெட்டிக்குள் பெண் சடலம்

    By புது தில்லி  |   Published on : 01st April 2014 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேற்கு தில்லி விகாஸ்புரி குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் பெட்டியில் பெண்ணின் சடலம் கிடந்தது திங்கள்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

     போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் அப் பெண்ணின் பெயர் செüமித்ரா தேவி என்றும், கடந்த சனிக்கிழமை முதல் அவர் காணாமல் போயிருந்ததாகவும் தெரிய வந்தது. எனினும், அவர் காணாமல் போனது தொடர்பாக அவரது குடும்பத்தினர் போலீஸிடம் இதுவரை தெரிவிக்கவில்லை.

     இது குறித்து போலீஸ் உயரதிகாரி கூறுகையில், "செüமித்ரா தேவியின் உடல், அவருடைய வீட்டில் உள்ள பெட்டிக்குள் இருந்ததை கண்டு அவரது மகன் பப்லு திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு தகவல் அளித்தார். செüமித்ரா தேவியின் மற்றொரு மகன் திங்கள்கிழமை காலை முதல் காணவில்லை. ஆகவே, அவர் செüமித்ரா தேவியை கொலை செய்து விட்டு தப்பியோடி இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். வேறு கோணத்திலும் விசாரித்து வருகிறோம்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai