Enable Javscript for better performance
ஹரியாணா குண்டு வெடிப்பு வழக்கு: தேடப்பட்டவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஹரியாணா குண்டு வெடிப்பு வழக்கு: தேடப்பட்டவர் கைது

    By புது தில்லி,  |   Published on : 01st April 2014 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஹரியாணா மாநிலத்தில் 2010-ஆம் ஆண்டில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்டவரை தில்லி போலீஸார் கைது செய்தனர்.

    இது தொடர்பாக தில்லி குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையர் ரவீந்திர யாதவ் செய்தியாளர்களிடம் கூறியது:

    ஹரியாணா மாநிலம், ஜிந்த் மாவட்டத்தை சேர்ந்தவர் நரேந்தர் ரதி. இவருக்கும் அதே   பகுதியை சேர்ந்த கிஸ்மத் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு  ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த கிஸ்மத், தன் கூட்டாளிகளான பவன் (எ) பூனா, சாஹர் (எ) கலா, குர்னாம், ராஜேஷ், சுரேந்தர், ராஜேந்தர் மற்றும் உறவினர் கிருஷண் குமார் மாலிக் ஆகியோருடன் சேர்ந்து 2010-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி நரேந்தர் ரதியின் அலுவலகத்தை வெடிகுண்டு வைத்துதகர்த்தனர்.

     இது தொடர்பாக, நரேந்தர் ரதி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் பவன், சாஹர், ராஜேஷ், குர்னாம், சுரேந்தர் மற்றும் கிஸ்மத் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

    மற்ற மூவரையும் போலீஸார் தேடி வந்தனர். அவர்களை "தேடப்படும் குற்றவாளிகள்' என 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அறிவித்தது.

    இந் நிலையில் தேடப்பட்டு வந்த கிருஷண் குமார் மாலிக் (30) தில்லி முஹார்பா சௌக் பகுதியில் பதுங்கியிருப்பதாக தில்லி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, வடக்கு சரக குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் குமார் கியானேஷ் உத்தரவின் பேரில் கிருஷண் குமாரை தனிப்படையினர் வெள்ளிக்கிழமை சுற்றிவளைத்து கைது செய்தனர். இவர் மீது ஏற்கெனவே இரண்டு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது' என்றார் ரவீந்திர யாதவ்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai