Enable Javscript for better performance
ஆம்ஆத்மி போஸ்டர்களில் மோடி உருவம்:தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்- Dinamani

சுடச்சுட

    

    ஆம்ஆத்மி போஸ்டர்களில் மோடி உருவம்:தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்

    Published on : 02nd April 2014 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆம்ஆத்மி கட்சியின் பிரசார போஸ்டர்களில் நரேந்திர மோடியின் புகைப்படத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக சார்பில் தில்லி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அந்த போஸ்டர்களில் அருவருக்கத்தக்க வகையில் நரேந்திர மோடி  சித்திரிக்கப்பட்டுள்ளதாக அம் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து தில்லி பிரதேச பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் சஞ்சய் கௌல் கூறுகையில், ஆம்ஆத்மி கட்சியின் சில பிரசார போஸ்டர்களில் பாஜக பிரதமர் பதவி  வேட்பாளர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. அப் போஸ்டர்கள் அருவருக்கத்தக்க வகையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது. இது எங்கள் கட்சியையும் கட்சியின் பிரதம வேட்பாளரையும் விமர்சிப்பதால் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகும். இதுபோன்ற தவறான செயல்களுக்காக ஆம்ஆத்மி கட்சிக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று தில்லி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். சில ஆட்டோக்களிலும் மோடியின் உருவம் பொறித்த போஸ்டர்கள் அக் கட்சியின் சார்பில் ஒட்டப்பட்டுள்ளன. அவற்றை அகற்றுவது தொடர்பாக புகாரின் நகல் தில்லி காவல் துறையின் ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

    மேலும், இதேபோல மற்றொரு புகாரும் பாஜக தில்லி சட்டப் பிரிவு சார்பில் தில்லி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில் "தவறான தகவல்களை ரேடியோ மூலம் ஆம்ஆத்மியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் பரப்பிவருவதாக கூறப்பட்டுள்ளது. இப் புகாரை தில்லி பிரதேச பாஜக சட்டப் பிரிவு அமைப்பாளர் அனில் சோனி அனுப்பியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai