Enable Javscript for better performance
ஜீவார் பகுதியில் ஆம்ஆத்மி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஜீவார் பகுதியில் ஆம்ஆத்மி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

    Published on : 02nd April 2014 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசியத் தலைநகர் வலயப் பகுதியில் உள்ள உத்தர பிரதேச மாநிலத்தின் கௌதம் புத் நகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஆம்ஆத்மி கட்சியின் வேட்பாளர் கே.பி. சிங், தொகுதிக்குள்பட்ட ஜீவார் பகுதியில் தனது கட்சி ஆதரவாளர்களுடன் திங்கள்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

    கிரேட்டர் நொய்டா, ஜீவார் பகுதியில் உள்ள ராம்நர், சிரோலி மற்றும் சுற்றுப் புற கிராமங்களில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். மேலும், குர்ஜாவில் உள்ள ஹபிபூர் உள்ளிட்ட கிராமங்களிலும் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோருக்கு இடையே உள்ள கூட்டு காரணமாக சிக்கந்தராபாத், குர்ஜா பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக எவ்வித மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

    விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களுக்கு உரிய விலையைக்கூட பெற முடியவில்லை. பாஜகவுக்கு ஆதரவான பெரும்பாலான வியாபாரிகளால் விவசாயிகள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

    அதேபோன்று, தற்போதைய மிகப்பெரிய ஊழல்களுக்கும் அத்தியவாசியப் பொருள்களின் விலை உயர்வுக்கும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுதான் காரணம். எனவே, இதெற்கெல்லாம் தீர்வு காண மத்தியில் ஆம்ஆத்மி மூலம் ஒரு விடிவு பிறக்க வேண்டும்.

    அதற்கு வரும் மக்களவைத் தேர்தலில் ஆம்ஆத்மி சார்பில் போட்டியிடும் என்னை வாக்காளர்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார் கே.பி. சிங். ஆம்ஆத்மி கட்சித் தலைவர் மன்வீர் பட்டி பேசுகையில், "விவசாயிகளின் நலன் ஆம்ஆத்மி அரசு மூலம்தான் சாத்தியமாகும். ஆகவே, மக்களவைத் தேர்தலில் ஆம்ஆத்மி வேட்பாளர்களை விவசாயிகளும் பொதுமக்களும் வெற்றிபெறச் செய்ய வேண்டும்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai