மதவாதத்துக்கு எதிராக காங்கிரஸ் நூதன பிரசாரம்
Published on : 02nd April 2014 12:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மதவாதம், பிரிவினைவாதம் ஆகியவற்றுக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மிஸ்டு கால் கொடுக்க வாக்காளர்களுக்கு அழைப்பு விடுக்கும் நூதன பிரசாரத்தை காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பால்சந்திரா முங்கேகர் மேற்கொண்டுள்ளார்.
மும்பை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரான பால்சந்த்ரா முங்கேகர், "பிரிவினைவாதத்துக்கு எதிரானவர்கள், தங்கள் ஆதரவை தெரிவிக்க "08407900090' என்ற செல்போன் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம்' என்ற பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.
இது தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய அவர், "இப் பிரசாரம் மூலம் யார் வேண்டுமென்றாலும் மதவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்கு எதிராக தங்கள் ஆதரவைத் தெரிவிக்கலாம். ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கவும், ஜனநாயகத்தைக் காக்கும் வகையிலும் சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இம் முயற்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். மதவாத சக்திகளிடம் சிக்கிவிடாமல் நம் நாட்டைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்' என்றார்.