Enable Javscript for better performance
மின்கட்டண உயர்வுக்கு எதிரான மனு: தில்லி உயர் நீதிமன்றம் நிராகரிப்பு - Dinamani

சுடச்சுட

    

    மின்கட்டண உயர்வுக்கு எதிரான மனு: தில்லி உயர் நீதிமன்றம் நிராகரிப்பு

    Published on : 02nd April 2014 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வறுமையில் வாடும் தில்லி குடியிருப்புவாசிகளுக்கு மின் கட்டணத்தை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உயர்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை தில்லி உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.

    இது தொடர்பாக லோக் சத்தா கட்சியைச் சேர்ந்த அனுராக் கேஜரிவால் பொதுநல மனு தாக்கல் செய்தார். "தில்லியில் வறுமையில் வாடும் குடியிருப்புவாசிகளுக்கு மாதந்தோறும் 400 யூனிட்களுக்கு குறைவாக உபயோகிக்கும் பயனீட்டாளர்களுக்கு மின்கட்டணத்தில் சலுகை அளிக்கும் திட்டத்தை முந்தைய அரசு கொண்டு வந்தது. இது மார்ச் 31-ஆம் தேதி வரை மட்டுமே பொருந்தும் என்றும், அதன்பின் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சலுகை விலை வழங்கப்பட மாட்டாது என்றும் மின் துறை தெரிவித்துள்ளது. இதனால், தில்லி குடியிருப்புவாசிகள் பெருமளவு பாதிக்கப்படுவர்' என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த மனு முதன்மை நீதிபதி பி.டி.அகமது மற்றும் நீதிபதி சித்தார்த் மிருதுள் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவில், "இது அரசின் கொள்கை முடிவு. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. மனுதாரர் நேரடியாக அரசிடமே முறையிட வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai