Enable Javscript for better performance
ஷாஸியா இல்மி மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையத்துக்கு வி.கே.சிங் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ஷாஸியா இல்மி மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையத்துக்கு வி.கே.சிங் கோரிக்கை

    Published on : 02nd April 2014 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தவறான கருத்துகளை மக்களிடையே பரப்பி வரும் காஜியாபாத் ஆம்ஆத்மி வேட்பாளர் ஷாஸியா இல்மி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய ராணுவ முன்னாள் தலைமத் தளபதியும் அண்மையில் பாஜகவில் சேர்ந்து காஜியாபாத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடுபவருமான வி.கே.சிங் வலியுறுத்தினார்.

    கடந்த திங்கள்கிழமை, காஜியாபாத் மக்களவைத் தொகுதியில் ஆம்ஆத்மி கட்சி வேட்பாளாரான ஷாஸியா இல்மி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, "மக்களவைத் தேர்தலில்  வி.கே.சிங்குக்கு பாஜக வாய்ப்பு அளித்தது மிகவும் தவறான முன்னுதாரணமாகும். ஒவ்வொரு குடிமகனும் தன் பணி ஓய்வுக்கு பின்னர் அரசியலுக்கு வர உரிமை உள்ளது. இருப்பினும், தன் பிறந்த தேதியே தெரியாது என்ற சர்ச்சையில் சிக்கியவர் வி.கே. சிங்.

    எனவே, இது போன்ற வேட்பாளர்களை பாஜக தேர்தலில் நிறுத்துவது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்' என்று இல்மி விமர்சித்திருந்தார்.

    இந் நிலையில் இல்மியின் கருத்து குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வி.கே. சிங், "ஆம்ஆத்மி கட்சியைப் பொருத்தவரை, உண்மைக்குப் புறம்பான தவறான கருத்துகளை மக்களிடம் பரப்பி வருவது வாடிக்கையாகிவிட்டது. இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் தேர்தல் பிரசாரத்தை ஒழுக்கமான முறையிலும் சுதந்திரமாகவும் வழி வகுக்கப்படும்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai