Enable Javscript for better performance
அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தாமல் இருக்க உடன்படிக்கை- Dinamani

சுடச்சுட

    

    அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தாமல் இருக்க உடன்படிக்கை

    By புது தில்லி  |   Published on : 03rd April 2014 02:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எந்த நாட்டின் மீதும் அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதியளிக்கும் வகையில் அணு ஆயுத வல்லமை நாடுகள் அனைத்தும் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் யோசனை தெரிவித்துள்ளார். அணு ஆயுத ஒழிப்புக்கு அது வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

    தில்லியில் "அணு ஆயுதமற்ற உலகம்' என்ற தலைப்பில் புதன்கிழமை நடைபெற்ற சர்வதேசக் கருத்தரங்கில் அவர் பேசியதாவது:

    எந்த நாட்டின் மீதும் இந்தியா அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தாது. உலகில் அணு ஆயுதம் வைத்திருக்கும் அனைத்து நாடுகளும், அணு ஆயுதம் என்பது மற்ற நாடுகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்பதற்காக தற்காப்புக்கு வைத்திருக்கும் விஷயம் என்பதை அங்கீகரித்து அதை அறிவிக்கத் தயாராக இருந்தால், உலகளாவிய அளவில் அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற நடைமுறைக்கு நாம் விரைவில் முன்னேற முடியும்.

    இதற்காக எந்த நாட்டின் மீதும் அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதியளிக்கும் வகையில் அணு ஆயுத வல்லமை நாடுகள் அனைத்தும் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அத்தகைய ஒப்பந்தத்துக்கு அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளும் தேவைப்படும். அணு ஆயுதமே இல்லை என்ற உறுதியான நிலையை எட்டுவதற்கு, அரசியல் மட்டத்திலான இந்த நடவடிக்கைகள் அவசியம். இந்த ஒப்பந்தம், படிப்படியாக அணு ஆயுதக் குறைப்புக்கும், இறுதியில் அவற்றை அறவே அகற்றுவதற்கும்

    வழிகளை ஏற்படுத்தும்.

    அணு ஆயுதங்களின் முக்கியத்துவத்தைக் குறைக்க வேண்டியது அவசியம். ஆனால், இதை தனியொரு நாட்டால் செய்ய முடியாது. அணு ஆயுதங்களை வைத்திருக்கும் அனைத்து நாடுகளும் உள்ளடங்கிய பல்முனை அமைப்புதான் இன்றைக்கு முக்கிய தேவையாக உள்ளது.

    அணு ஆயுதம் இல்லாத உலகை இந்தியா ஆதரிக்கின்றபோதிலும், தான் ஒரு அணு ஆயுத சக்தி படைத்த நாடு என்று அது அறிவித்துள்ளது. மோசமான பாதுகாப்புச் சூழல்தான் இதற்குக் காரணம்.

    பொறுப்பானதொரு அணு ஆயுத நாடு என்ற முறையில், அணு ஆயுதமில்லாத உலகம் என்ற சிந்தனையை இந்தியா ஆதரிக்கிறது. கடந்த 1974இல் பலத்தை எடுத்துக் காட்டிய (அணு ஆயுதச் சோதனை) பிறகு கால் நூற்றாண்டு காலம் கட்டுப்பாட்டைக் கடைபிடித்த ஒரே நாடு இந்தியாதான். மோசமான பாதுகாப்புச் சூழல்தான் நம்மை மீண்டும் அணு ஆயுதச் சோதனையை 1998இல் நடத்த வைத்தது. எனினும், ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு அணு சக்தியின் அவசியத்தை அனைவரும் உணர்ந்

    துள்ளனர் என்றார் மன்மோகன் சிங்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai