Enable Javscript for better performance
கேஜரிவாலுக்கு கருப்புக்கொடி காட்ட முயன்றதால் பரபரப்பு- Dinamani

சுடச்சுட

    

    கேஜரிவாலுக்கு கருப்புக்கொடி காட்ட முயன்றதால் பரபரப்பு

    By புது தில்லி,  |   Published on : 03rd April 2014 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் புதன்கிழமை தேர்தல் பிரசாரத்தின் போது ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக சிலர் கருப்புக் கொடி காட்ட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தில்லியின் 7 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் தற்போது களைகட்டியுள்ளது. பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திறந்தவெளி ஜீப்பில் வீதிவீதியாக பிரசாரத்தை தில்லியில் திங்கள்கிழமை தொடங்கினார். அப்போது அவர் சாந்தினி சௌக் மக்களவைத் தொகுதியில் அக் கட்சி வேட்பாளர் அசுதோஷை ஆதரித்து தீவிரமாக பிரசாரம் செய்தார்.

    மூன்றாவது நாளாக புதன்கிழமை கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் திறந்தவெளி ஜீப்பில் கேஜரிவால் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அத் தொகுதியின் கட்சி வேட்பாளரும், மகாத்மா காந்தியின் பேரனுமான ராஜ்மோகன் காந்திக்கு ஆதரவு கோரினார். கேஜரிவாலுக்கு வழிநெடுக கட்சியின் ஆதரவாளர்கள் கைகளை அசைத்துவாறு வரவேற்பு அளித்தனர். வீடுகளின் மாடிகளிலும், வீட்டின் ஜன்னல் வழியாகவும் பொதுமக்கள் கையசைத்து வரவேற்றனர். சில இடங்களில் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது. மலர் மாலைகளும் அணிவிக்கப்பட்டன.

    கிழக்கு தில்லி தொகுதிக்கு உள்பட்ட கீதா காலனியில் காலை சுமார் 10 மணிக்கு பிரசாரத்தைத் தொடங்கிய அவர், சாஸ்திரி நகர் பகுதி வழியாகச் சென்றார். காந்தி நகரில் பிரசாரம் மேற்கொண்ட போது அப் பகுதியைச் சேர்ந்த சிலர் அவருக்குக் கருப்புக் கொடியைக் காண்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

    இதனால், பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, தான் வைத்திருந்த மாலைகளை அவர்களுக்கு கேஜரிவால் பதிலுக்கு அளித்தார். பின்னர் அந்த இடத்தில் இருந்து வேறுபகுதி நோக்கி அவர் பிரசாரம் மேற்கொண்டார்.

    கிழக்கு தில்லி தொகுதியில் ஆம்ஆத்மி வேட்பாளர் ராஜ்மோகன் காந்தியை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகனும், இத் தொகுதியின் எம்பியுமான சந்தீப் தீட்சித் (காங்கிரஸ்), "ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்புடன் தொடர்புள்ள மகேஷ் கிரி (பாஜக) ஆகியோர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai