Enable Javscript for better performance
தில்லி கன்டோன்மென்டில் மார்ஷல் ஷாம் மானக்ஷா சிலை இன்று திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    தில்லி கன்டோன்மென்டில் மார்ஷல் ஷாம் மானக்ஷா சிலை இன்று திறப்பு

    By புது தில்லி,  |   Published on : 03rd April 2014 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய ராணுவத்தின் உயரிய பதவி வகித்த மறைந்த பீல்டு மார்ஷல் ஷாம் மானக்ஷாவின் நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலை தில்லி கன்டோன்மென்டில் உள்ள மானக்ஷா மையத்தில் வியாழக்கிழமை திறக்கப்பட உள்ளது.

    இந்திய ராணுவத் தலைமைத் தளபதி பிக்ரம் சிங் இச் சிலையைத் திறந்துவைக்க உள்ளார். பீல்டு மார்ஷல் மானக்ஷாவின் நூற்றாண்டு பிறந்த தினத்தை கௌரவிக்கும் வகையில் அவரது சிலை திறக்கப்பட உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பீல்டு மார்ஷல் ஷாம் மானக்ஷா பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் 1914, ஏப்ரல் 3-ஆம் தேதி பிறந்தார். இந்திய ராணுவத்தின் முதல் பீல்டு மார்ஷல் அதிகாரியாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்ட மானக்ஷா 2008, ஜூன் 27-ஆம் தேதி, தனது 94-ஆவது வயதில் மறைந்தார். 1971-ஆம் ஆண்டில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரில் இந்தியாவின் வெற்றியில் இவரது பங்களிப்பு அளப்பரியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai