Enable Javscript for better performance
தெலுங்கு தேசத்துடன் கூட்டணி அமையும்: பாஜக- Dinamani

சுடச்சுட

    

    ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசத்துடன் கூட்டணி அமையும் என்று பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவ்டேகர், தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

    கூட்டணிகள் என்பதும் திருமணம் போன்றவைதான். அவற்றுக்கு நீண்ட பேச்சுவார்த்தைகள் தேவைப்படுகின்றன.

    ஆந்திரத்தில் எங்கள் கூட்டணி உருவாவதில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கு அங்கு மக்களவைத் தேர்தல் தவிர சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவிருப்பதே காரணம் என்றார் ஜாவ்டேகர்.

    தெலங்கானாவில் 45-50 பேரவைத் தொகுதிகள் மற்றும் 8 மக்களவைத் தொகுதிகளையும், சீமாந்திரத்தில் 15 பேரவைத் தொகுதிகள் மற்றும் 5 மக்களவைத் தொகுதிகளையும் பாஜகவுக்கு தெலுங்கு தேசம் ஒதுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    டி.ஆர்.எஸ். தனித்துப் போட்டி? இதனிடையே, தெலங்கானா பகுதிக்கு இம்மாதம் 30ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் புதன்கிழமை வெளியிட்டது.

    அங்கு காங்கிரஸýடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி அதற்கு வாய்ப்பில்லை என்று கூறிவிட்டது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் டிஆர்எஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியபோதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இப்போதைய நிலவரப்படி, அக்கட்சி தனித்துப் போட்டியிடவே வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai