Enable Javscript for better performance
\\\"பாஜக தேர்தல் அறிக்கையில் பொய்யான வாக்குறுதிகள்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "பாஜக தேர்தல் அறிக்கையில் பொய்யான வாக்குறுதிகள்'

    By புது தில்லி  |   Published on : 03rd April 2014 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தலுக்காக வெளியிடப்பட்டுள்ள தில்லி பிரதேச பாஜக தேர்தல் அறிக்கையில் பொய்யான வாக்குறுதிகள் அடங்கியுள்ளன என்று பிரதேச காங்கிரஸ் கடுமையாகச் சாடியுள்ளது.

    இது தொடர்பாக அக் கட்சியின் பிரதேச தலைவர் அர்விந்தர் சிங் புதன்கிழமை கூறியது:

    முழு மாநில அந்தஸ்து வாக்குறுதி பாஜகவுக்கு புதிதல்ல. தில்லியில் மக்கள் ஆதரவை இழந்துவிட்ட பாஜக, தேர்தல் அறிக்கை மூலம் பிரச்னைகளைத் திசைத் திருப்பி வருகிறது.

    தற்போது முழு மாநில அந்தஸ்து குறித்து பேசி வரும் பாஜக, மத்தியில் ஆட்சியில் இருந்த போது விஜய் கபூர் துணை நிலை ஆளுராக இருந்தார். அப்போது துணைப் பிரதமராக இருந்த எல்.கே. அத்வானி, தில்லி அரசுக்கு உள்ள அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக் கொள்வது தொடர்பாக அறிவிக்கை வெளியிட்டார். இது தொடர்பாக பிரதேச பாஜக தலைமை பதில் அளிக்க வேண்டும். நல்ல நிர்வாகம், நீதி, விலைவாசி கட்டுப்பாடு உள்ளிட்ட வாக்குறுதிகளை அளிக்கும் பாஜகவின் 5 ஆண்டு கால ஆட்சியில் தில்லிவாசிகள் இன்னலுக்கு ஆளாகினர். தில்லியில் மின் கட்டணத்தை 30 சதவீதம் எவ்வாறு குறைக்கப் போகிறது என்பதை பாஜக விளக்க வேண்டும்.

    அங்கீகாரமற்ற காலனிகளின் மேம்பாடு குறித்து அக்கறை கொள்ளப்படும் என கூறும் பாஜகதான், அங்கீகாரமற்ற காலனிகளை முறைப்படுத்துவதற்கு தடைக்கல்லாக இருந்து வந்துள்ளது. இந்திரா காந்தி ஆட்சி காலத்தில்தான் தில்லியில் ஜே.ஜே. காலனிகளில் வசிக்கும் குடிசைவாசிகளுக்கு குடியிருப்புகள் கட்டுவதற்கு இடம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியில்தான் "ராஜீவ் ரத்தன் ஆவாஸ்' திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டன.

    தில்லியில் பாஜக ஆட்சியில் முதியோர்களுக்கு மாதம் ரூ.200 மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் அத் தொகை ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டது. கடந்த 15 ஆண்டு கால ஆட்சியில் புதிதாக மருத்துவமனைகள் தொடங்கப்பட்டன. ஆனால், பாஜகவின் முந்தைய ஐந்து ஆண்டு கால ஆட்சியில் புதிதாக மருத்துவமனை தொடங்கப்படவில்லை. இவற்றை மறந்துவிட்டு, பிரதேச பாஜகவினர் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கின்றனர் என்றார் அரவிந்தர் சிங்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai