Enable Javscript for better performance
பிஎஸ்பி எம்.பி.க்கு எதிரான பாலியல் வழக்கு நீதிமன்ற விசாரணை ஏப்ரல் 4-இல் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பிஎஸ்பி எம்.பி.க்கு எதிரான பாலியல் வழக்கு நீதிமன்ற விசாரணை ஏப்ரல் 4-இல் தொடக்கம்

    By புது தில்லி,  |   Published on : 03rd April 2014 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேச பகுஜன் சமாஜ் கட்சி எம்பி தனஞ்ஜெய் சிங் மீதான 42 வயது பெண்ணை நான்கு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு விசாரணை ஏப்ரல் 4-ஆம் தேதி தில்லி நீதிமன்றத்தில் தொடங்க உள்ளது.

    தனஞ்ஜெய் சிங் எம்.பி. தன்னை 2005 முதல் 2009-ஆம் ஆண்டு வரை அச்சுறுத்தி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்தார். தனது கணவர் மூலம் தனஞ்ஜெய் சிங்கிடம் 2005, பிப்ரவரியில் அறிமுகமான தன்னை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் உறவு கொண்டதாகவும், காயப்படுத்தியதாகவும், அச்சுறுத்தியதாகவும் அப் பெண் புகாரில் தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பான வழக்கில் தில்லி நீதிமன்றத்தில் தனஞ்ஜெய் சிங்கிற்கு எதிராக பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பாக மூன்று மருத்துவர்கள் உள்பட 13 அரசு தரப்பு சாட்சிகளையும் போலீஸார் குற்றப் பத்திரிகையில் சேர்த்திருந்தனர்.

    இந் நிலையில், இது தொடர்பான வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சரிதா பீர்பால், அரசுத் தரப்பு சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு ஏப்ரல் 4-ஆம் தேதி தொடங்கும் என்று குறிப்பிட்டார். ஏற்கெனவே, கடந்த ஆண்டு நவம்பரில் தில்லியில் வீட்டுப் பணிப் பெண் ராக்கி பத்ரா (35) கொலை வழக்கில் எம்பி தனஞ்ஜெய் சிங் மற்றும் அவரது மனைவி ஜாக்ருதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai