Enable Javscript for better performance
புது தில்லி தொகுதியில் சிறப்பு மகளிர்,குழந்தைகள் நல மையங்கள்: ஆம்ஆத்மி- Dinamani

சுடச்சுட

    

    புது தில்லி தொகுதியில் சிறப்பு மகளிர்,குழந்தைகள் நல மையங்கள்: ஆம்ஆத்மி

    By புது தில்லி,  |   Published on : 03rd April 2014 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புது தில்லி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளில் சிறப்பு மகளிர், குழந்தைகள் நல மையங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அத் தொகுதியின் ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர் ஆசிஷ் கேதான் வாக்குறுதி அளித்துள்ளார்.

    புது தில்லி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதிகளை கட்சியின் அலுவலகத்தில் புதன்கிழமை ஆசிஷ் கேதான் வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள் குறித்து அவர் கூறியதாவது:

    அரசுத் திட்டங்களில் பொதுமக்களின் பங்களிப்பை உறுதிப்படுத்துவது கட்சியின் நோக்கமாகும். பெண்களின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். எம்.பி.யின் நிதி செலவிடப்படுவதற்கு முன்பு மக்களிடம் கலந்தாலோசிக்கப்படும். நான் எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் நிதியின் ஒட்டுமொத்த பயன்பாடு மற்றும் பொறுப்பை உறுதிப்படுத்தும் வகையில் மாநகராட்சி, மாநிலம், மத்திய அரசு ஆகிய

    மூன்றடுக்கு நிர்வாகங்கள் குறித்து வலியுறுத்துவேன். புது தில்லி மக்களவைத் தொகுதியில் நகர்ப்புற உள்கட்டமைப்பு வசதி மோசமாக உள்ளது.

    முடிவெடுக்கும் நடைமுறைகளில் கட்டடவியலாளர்கள், நகர்ப்புற திட்டமிடுநர்கள் சாமான்ய மக்கள் ஆகியோரின் பங்களிப்பு ஊக்கப்படுத்தப்படும்.

    மக்களவைத் தொகுதியில் உள்ள அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் சிறப்பு மகளிர் மற்றும் குழந்தைகள் நல மையங்களை உருவாக்கவும், தொகுதியில் இருள்பகுதி இல்லாமல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். பொறுப்பை ஏற்கச் செய்யும் வகையில் தில்லி காவல் துறையை மாநில அரசின் கீழ் கொண்டு வரவும், காவல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாதம் ஒன்றுக்கு 400 யூனிட்டுகள் வரை பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு மானியம் அளிக்கவும், வீடுகளுக்கு குழாய் மூலம் 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

    மேலும், தேர்தல் அறிக்கையில் கல்வி, சுகாதாரம், உடல்நலம், அரசு ஊழியர்கள் மேம்பாடு தொடர்பாகவும் அவர் வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai