Enable Javscript for better performance
பைக்குகள் மோதல்: சிறுவன் பலி- Dinamani

சுடச்சுட

    

    மேற்கு தில்லியில் மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் சிறுவன் உயிரிழந்தான். மூன்று பேர் காயமடைந்தனர்.

    இது குறித்து தில்லி போலீஸார் புதன்கிழமை கூறியதாவது: தில்லியை சேர்ந்தவர் சபர் (16). இவர் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் தனது நண்பர் சங்கி (18) என்பவருடன் மோட்டார்சைக்கிளில் மேற்கு தில்லியில் உள்ள பவானா பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சங்கியின் வாகனமும், எதிரே வந்த மற்றொரு மோட்டார்சைக்கிளும் மோதிக் கொண்டன. இதில், சபர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சங்கியும், மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த நவீன் (18), குல்தீப் (20) ஆகியோரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai