Enable Javscript for better performance
மலைமந்திர் கோயிலில் பங்குனி உத்திர விழா ஏப்ரல் 6-இல் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மலைமந்திர் கோயிலில் பங்குனி உத்திர விழா ஏப்ரல் 6-இல் தொடக்கம்

    By புது தில்லி,  |   Published on : 03rd April 2014 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி ஆர்.கே.புரத்தில் அமைந்துள்ள உத்தர சுவாமிமலை எனும் மலைமந்திர் ஸ்ரீ சுவாமிநாத சுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழா ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கி 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

    ஏப்ரல் 6-ஆம் தேதி காலை 8 மணிக்கு கோயில் வளாகத்தில் விக்னேஷ்வர பூஜை, அனுக்ஞை பூஜையுடன் விழா தொடங்குகிறது.

    விழா நாள்களின் போது தினமும் மூலவர் சிறப்பு அலங்காத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஏப்ரல் 7-இல் ஸ்ரீ சுவாமி நாத சுவாமிக்கு (மூலவருக்கு) அபிஷேகம், லட்சார்ச்சனை, ஸ்ரீ சண்முக அர்ச்சனை, சொர்ண வில்வ அர்ச்சனை, உச்சிகால பூஜை, அர்த்தஜாம பூஜை நடைபெறும். ஏப்ரல் 12-ஆம் தேதி காலை 8.15 மணியில் இருந்து மஹன்யாஸ பூர்வ ஏகதஸ ருத்ர ஜபம் நடைபெறும்.

    ஏப்ரல் 13-ஆம் தேதி பங்குனி உத்திரம் நடைபெறும். இதையொட்டி, காலை 10.30 மணிக்கு காவடி எடுக்கும் நிகழ்ச்சி, மாலை 6.30 மணிக்கு ஸ்ரீ வள்ளி - சுப்ரமணியர் திருக்கல்யாணம், இரவு 9.15 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகக் குழுவினர் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai