Enable Javscript for better performance
\\\"ஏசி\\\' கூடாரத்தில் மோடி உண்ணாவிரதம் மக்களை ஏமாற்ற நடத்திய நாடகம்- Dinamani

சுடச்சுட

    

    "ஏசி' கூடாரத்தில் மோடி உண்ணாவிரதம் மக்களை ஏமாற்ற நடத்திய நாடகம்

    By புது தில்லி,  |   Published on : 04th April 2014 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    "சில ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் முதல்வர் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் உண்ணாவிரதம் இருந்தது மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்பட்ட நாடகம்' என்று ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் கடுமையாகச் சாடியுள்ளார்.

    மக்களவைத் தேர்தலையொட்டி ஹரியாணா, உத்தரப் பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பிரசாரம் மேற்கொண்டிருந்த கேஜரிவால், இந்த வாரத் தொடக்கத்தில் தில்லி திரும்பினார். தில்லியில் திங்கள்கிழமை தனது பிரசாரத்தைத் தொடங்கினார். மூன்றாவது நாளாக புதன்கிழமை மாலையில் வடகிழக்கு மக்களவைத் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அத் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சரும், அக் கட்சியின் வேட்பாளருமான ராக்கி பிர்லாவை ஆதரித்து அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

    மங்கோல்புரியில் நடைபெற்ற பிராசரக் கூட்டத்தில் கேஜரிவால் பேசியது: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் முதல்வர் குளிர் சாதன வசதியுடன் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் அமர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவர்வதற்காக அவர் நடத்திய நாடகம்தான் அது. அதற்கான செலவுகளை அதானி குழும நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், தலைநகரில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தில்லி ரயில் பவன் அருகே கட்சித் தொண்டர்களுடன் கடும் குளிர் நிலவிய ஜனவரியில் நான் உண்ணாவிரதம் இருந்தேன். தலைநகரில் டென்மார்க் பெண் உள்பட இருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்த உண்ணாவிரதத்தை கட்சித் தொண்டர்களுடன் மேற்கொண்டேன். இரவில் சாலையில் வெட்ட வெளியில் உறங்கினேன். குளிரில் நடுங்கிக் கொண்டுதான் உண்ணாவிரதம் இருந்தேன். நான் ஒன்றும் மக்களை ஏமாற்றுவதற்காக உண்ணாவிரதம் இருக்கவில்லை.

    ஆனால், நரேந்திர மோடியோ குளிர்சாதன வசதியுடன் அமைந்த கூடாரத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவர் ஒன்றும் சாலையில் கடும் குளிரில் படுத்துத் தூங்கவில்லை. மேலும், 2011, 2012-ஆம் ஆண்டுகளிலும் அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். மக்கள் நலனுக்காக அவர் இதை நடத்தவில்லை. சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவர்வதற்காக அவர் நடத்திய நாடகம்தான் இந்த உண்ணாவிரதம் என்றார் கேஜரிவால்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai