Enable Javscript for better performance
சிறுமி பாலியல் வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை- Dinamani

சுடச்சுட

    

    சிறுமி பாலியல் வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை

    By புது தில்லி,  |   Published on : 04th April 2014 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் கோயிலுக்கு பிரசாதம் வாங்கச் சென்ற 4 வயது சிறுமியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஹரியாணா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் சுந்தர் லால் (60). இவர், தில்லி ராணி பாக் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் சுந்தர் லாலை போலீஸார் கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, "சுந்தர் லால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ராணி பாக் பகுதியில் உள்ள கோயில் அருகே சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். அப்போது, அக்கோயிலுக்கு வழக்கமாக பிரசாதம் வாங்கச் செல்லும் 4 வயது சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரத் துன்புறுத்தலில் ஈடுபட்டார்.

    சிறுமியின் அலறல் சப்தம் கேட்டு அவரது தாய் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தார். அப்போது, கொடூரச் செயலில் லால் ஈடுபட்டது தெரிய வந்தது. பின்னர், அவர் கைது செய்யப்பட்டார்' என்று அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நீதிபதி தனியாக அழைத்து விசாரணை நடத்தினார்.

    அப்போது, சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து நீதிபதியிடம் கூறினார். இரு தரப்பு விசாரணைக்குப் பிறகு கூடுதல் செஷன்ஸ் நீதிபதி இல்லா ராவத் அளித்த உத்தரவு:

    இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் சிறுமி அளித்த விவரங்களும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. சிறுமிக்கு தாத்தா வயதுடைய குற்றம்சாட்டப்பட்ட நபரின் செயல் மிகவும் அருவெறுக்கத்தக்கது. ஆகவே, சுந்தர் லாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.

    மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு "மீட்பு மற்றும் இழப்பீட்டு நிதி' திட்டத்தின் கீழ் தில்லி பிரதேச அரசு ரூ.1 லட்சம் இழப்பீடு அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டார்.

    முன்னதாக, "என் மீது வேண்டுமென்றே போலீஸார் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆகவே, என்னை வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும்' என்று சுந்தர் லால் நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால், அதை நீதிமன்றம் நிராகரித்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai