Enable Javscript for better performance
தமிழக ஐஜி பால நாக தேவி ஆந்திர ஐபிஎஸ் பிரிவுக்கு மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழக ஐஜி பால நாக தேவி ஆந்திர ஐபிஎஸ் பிரிவுக்கு மாற்றம்

    By புது தில்லி,  |   Published on : 04th April 2014 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக காவல்துறையின் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் உறுப்பினர் செயலராகப் பணியாற்றி வரும் பெண் ஐபிஎஸ் உயரதிகாரி பி. பால நாக தேவி தமிழக ஐபிஎஸ் பிரிவில் இருந்து ஆந்திர பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் ஐ.ஜி அந்தஸ்தில் பணியாற்றும் அதிகாரியாவார்.

    ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பால நாக தேவி, 1995-ஆம் ஆண்டில் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றார். அதைத் தொடர்ந்து அவருக்கு தமிழக பிரிவு ஒதுக்கப்பட்டது. அதன் பிறகு, பெரிய நாயக்கன் பாளையத்தில் உதவிக் கண்காணிப்பாளர், நீலகிரி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர், போதை ஒழிப்பு நுண்ணறிவுப் பிரிவு, கோவை, மதுரை சரக டிஐஜி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் அவர் பணியாற்றினார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவருக்கு ஐஜி ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல் சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டார்.

    இந் நிலையில், தமிழக ஐபிஎஸ் பிரிவில் இருந்து ஆந்திர ஐபிஎஸ் பிரிவுக்கு மாற்றல் கோரும் அவரது விண்ணப்பத்தை தமிழக அரசு மத்திய உள்துறைக்கு கடந்த ஜனவரியில் அனுப்பி வைத்தது. அதைப் பரிசீலித்த மத்திய உள்துறை பால நாக தேவியின் ஐபிஎஸ் மாநில பிரிவு மாற்றலுக்கான அனுமதியை புதன்கிழமை வழங்கியது. இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலருக்கும் தமிழக காவல் துறை தலைமை இயக்குநருக்கும் மத்திய உள்துறை அனுப்பியுள்ள கடிதத்தில் "ஆந்திர பிரிவில் சேரும் நாள் முதல், மூன்று ஆண்டுகளுக்கோ அல்லது அதற்கும் அதிகமான காலத்துக்கோ பால நாகதேவி ஆந்திர பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai