Enable Javscript for better performance
பாலம் பகுதியில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை- Dinamani

சுடச்சுட

    

    பாலம் பகுதியில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை

    By புது தில்லி,  |   Published on : 04th April 2014 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி மெட்ரோ ரயில்வே மூன்றாம் கட்டப் பணியையொட்டி, ஜனக்புரி மேற்கு - பொட்டானிகல் கார்டன் இடையிலான வழித்தடத்தில் 1.50 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணியை தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) தொடங்கியுள்ளது.

    இதற்காக பாலம் பகுதியில் தரைக்கடியில் சுரங்கம் துளையிடும் இயந்திரம் வியாழக்கிழமை இறக்கப்பட்டது. இந்த இயந்திரத்தின் பாகங்களை முழுமையாகப் பொருத்தி, துளையிடும் பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக டிஎம்ஆர்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    தில்லி மெட்ரோ ரயிலின் மூன்றாம் கட்டப் பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 2016-ஆம் ஆண்டில் இப் பணிகளை விரைந்து முடிக்க டிஎம்ஆர்சி திட்டமிட்டுள்ளது. இதனால், தலைநகரில் பல்வேறு இடங்களில் தரைக்கு அடியில் சுரங்கப் பாதைகளை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந் நிலையில், ஜனக்புரி மேற்கு - பொட்டானிகல் கார்டன் இடையிலான வழித்தடத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கான ஆயத்த வேலைகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன. இச்சுரங்கப் பாதை 1.51 கிலோமீட்டர் தூரத்துக்கு தரைக்கடியில் 5.8 மீட்டர் உள்வட்டத்தில், 6.3 மீட்டர் வெளிப்புற உள்வட்டத்திலும் அமைக்கப்பட உள்ளது.

    பாலம் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள இப் பணி மூலம் ஜனக்புரி, டாப்ரி, பாலம் மற்றும் இந்திரா காந்தி ஏர்போர்ட், உள்நாட்டு முனையம், ஹோஸ் காஸ், ஐஐடி, நேரு பிளேஸ், ஜாமியா மிலியா பல்கலைக்கழகம், நொய்டா போன்ற பகுதிகளை இணைப்பதற்கு முக்கிய வழித்தடம் ஏற்பட உள்ளது.

    36.58 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஜனக்புரி மேற்கு - பொட்டானிகல் கார்டன் இடையிலான மூன்றாவது கட்ட வழித்தட திட்டத்தில் 23.69 கிலோமீட்டர் தூரப்பகுதி தரைக்கடியில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 6 துளையிடும் இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

    மொத்தம் 20 சுரங்கத் துளையிடும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணியில் சுமார் 53 கிலோ மீட்டர் தூர வழித்தடம் தரைக்கடியில் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுமானப் பணியில் 34 துளையிடும் இயந்திரங்கள் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளன. மொத்தம் 74 சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட உள்ளதாக டிஎம்ஆர்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai