Enable Javscript for better performance
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் வாக்களிக்க 8.86 லட்சம் பேர் தகுதி- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் வாக்களிக்க 8.86 லட்சம் பேர் தகுதி

    By புது தில்லி,  |   Published on : 04th April 2014 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8,85,925 பேர் வாக்களிக்கத் தகுதி வாய்ந்தவர்கள் என்று தேர்தல் ஆணையம் கண்டறிந்துள்ளது. இதில் 8,85,402 பேர் புகைப்படங்களுடன் கூடிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

    தமிழகம், புதுச்சேரி மாநிலங்களுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 24-ஆம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 5-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

    வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 7-ஆம் தேதியும், வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு ஏப்ரல் 9-ஆம் தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுவை பிரதேசத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவைத் தொகுதியின் (பொது) வாக்காளர்கள், கடந்த இரு தேர்தல்கள் தொடர்பான செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

    புதுவை பிரதேசத்தில் மொத்த மக்கள்தொகை 12,47,953 பேர். இதில் ஆண்கள் 6,12,511 பேர், பெண்கள் 6,35,442 பேர் உள்ளனர். மொத்த வாக்காளர்கள் 8,85,925 பேர் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 4,25,285 பேர், பெண் வாக்காளர்கள் 4,60,628 பேர், பிறர் 12 பேர் உள்ளனர். இவர்களில் புகைப்படங்களுடன்கூடிய மொத்த வாக்காளர்கள் 8,85,402 பேர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    மொத்த வாக்காளர்களில் 18-25 வயதுடைய ஆண் வாக்காளர்கள் 57,763 பேர், பெண் வாக்காளர்கள் 56,977 பேர், பிறர் 2 பேர் என மொத்தம் 1,14,742 பேர் (12.96 சதவீதம்) உள்ளனர்.

    25-40 வயதுடைய ஆண் வாக்காளர்கள் 1,58,336 பேர், பெண் வாக்காளர்கள் 1,82,541 பேர், பிறர் 8 என மொத்தம் 3,40,885 பேர் (38.50 சதவீதம்) உள்ளனர்.

    40-60 வயதுடைய ஆண் வாக்காளர்கள் 1,54,570 பேர், பெண் வாக்காளர்கள் 1,59,321 பேர், பிறர் 1 என மொத்தம் 3,13,892 பேர் (35.45 சதவீதம்) உள்ளனர்.

    60 வயதுக்கு மேல் ஆண் வாக்காளர்கள் 54,289 பேர், பெண் வாக்காளர்கள் 61,649 பேர், என மொத்தம் 1,15,939 பேர் (13.09 சதவீதம்) உள்ளனர்.

    கடந்த தேர்தலின் வேட்பாளர்கள் எண்ணிக்கை: இத் தொகுதியில் கடந்த 2004-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 20 ஆண் வேட்பாளர்களும், ஒரு பெண் வேட்பாளரும் போட்டியிட்டனர். 2009-ஆம் ஆண்டு தேர்தலில் 28 ஆண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    2004-ஆம் ஆண்டில் பொதுப் பிரிவில் 18 வேட்பாளர்களும், எஸ்.சி. பிரிவில் 3 பேரும் போட்டியிட்டனர். 2009-ஆம் ஆண்டு தேர்தலின்போது பொதுப் பிரிவில் 23 வேட்பாளர்களும், எஸ்.சி. பிரிவில் 5 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

    2004-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது இத் தொகுதி வாக்காளர்களில் 77.3 சதவீதம் ஆண்களும், 74.9 சதவீதம் பெண்களும் வாக்களித்தனர். அதேபோன்று, 2009-ஆம் ஆண்டு தேர்தலில் 79.9 சதவீதம் ஆண்களும், 79.8 சதவீதம் பெண்களும் வாக்களித்தனர்.

    2004-ஆம் ஆண்டு தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளரும் (49.95 சதவீதம் வாக்குகள்), 2009-ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரும் (49.41) வெற்றி பெற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai