பூசா ரோடு டிடிஇஏ பள்ளியில் நூலகம் திறப்பு
By புது தில்லி | Published on : 04th April 2014 12:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
: பூசா ரோடு தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட நூலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
இந் நூலகத்தை எம்.டி. சோலார் தெர்ம் எனர்ஜி வென்சூர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த என். வெங்கட்ராமன் திறந்து வைத்துப் பேசினார். நூலகத்தின் பயன்கள் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்தார். பள்ளியின் முதல்வர் கீதா அருணாசலம் பேசுகையில், "ஊடகங்களின் தாக்கம் மாணவர்களிடையே வெகுவாகப் பரவியுள்ளது. தொடக்க நிலைக் கல்வி பயிலும் போதே, ஆக்கப்பூர்வமாகவும், பன்முகத் தன்மையை வெளிப்படுத்தும் வகையிலும் மாணவர்கள் திகழ வேண்டும். நல்ல நூல்கள் மட்டுமே மாணவர்களின் அறிவுக் கண்ணைத் திறக்கச் செய்யும் வாய்ப்பாகும். பூசா ரோடு டிடிஇஏ பள்ளி ஆசிரியர்கள் பிறந்த நாள் நன்கொடையாக வழங்கிய நிதியைக் கொண்டு இந் நூலகம் உருவாக்கப்பட்டது' என்றார்.
டிடிஇஏ செயலர் ஆர். ராஜு பேசுகையில், மாணவர்களின் மனதைக் கவரும் நூல்களைக் கொண்டு "புதிய குழந்தைகள் நூலகம்' உருவாக்கியதற்காக முதல்வர் கீதா அருணாசலத்துக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.
இந் நிகழ்ச்சியில் டிடிஇஏ தலைவர் சூரியநாராயணன், துணைத் தலைவர் ராஜு, லோதி எஸ்டேட் பள்ளியின் முதல்வர் மைதிலி, உறுப்பினர் ஏ.கே. மணி, குர்கான் தமிழ்ச்சங்கத் தலைவர் சக்தி பெருமாள், பூசா ரோடு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.