Enable Javscript for better performance
முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது குஜராத் அரசு குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது குஜராத் அரசு குற்றச்சாட்டு

    By புது தில்லி,  |   Published on : 04th April 2014 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் உத்தரவின்பேரில், பெண் ஒருவர் வேவு பார்க்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தை எழுப்பிய முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மாவுக்கு எதிராக பல்வேறு குற்றவியல் வழக்குகள் உள்ளதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

    உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக குஜராத் அரசு வியாழக்கிழமை தாக்கல் செய்த வாக்கு மூலத்தில், ""இந்த விவகாரத்தில் யாருடைய தனியுரிமையும் பாதிக்கப்படவில்லை.

    குஜராத் அரசின் உளவு அமைப்புகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் தனக்குத் தெரிந்துதான் நடைபெற்றதாக சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணே, தனது கணவர் மற்றும் தந்தையுடன் மாநில மகளிர் ஆணையத்தில் தெரிவித்துள்ளார்.

    மிகவும் தேவையான சூழலில் தனக்கு குஜராத் அரசு செய்த உதவிக்காக நன்றிகளையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.

    இந்த விவாகரத்தை தற்போது எழுப்பியுள்ள முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா மீதே பல குற்றவியல் வழக்குகள் உள்ளன'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மோடியின் உத்தரவின்பேரில் குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பெண் ஒருவரை வேவு பார்த்தாக சில இணைய தளங்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்தது.

    இந்த விவகாரத்தில் நரேந்திர மோடி மீது முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பதிவு செய்யக் கோரி, பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் சர்மா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த எழுத்துப்பூர்வ வாக்குமூலத்தை குஜராத் அரசு சமர்ப்பித்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai