Enable Javscript for better performance
முறைகேடாக காஸ் சிலிண்டர்களை விற்பனை செய்ததாக 6 பேர் கைது - Dinamani

சுடச்சுட

    

    முறைகேடாக காஸ் சிலிண்டர்களை விற்பனை செய்ததாக 6 பேர் கைது

    By புது தில்லி,  |   Published on : 04th April 2014 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஸ் சிலிண்டர்களை முறைகேடாக விற்பனை செய்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதுகுறித்து தில்லி போலீஸார் கூறியதாவது:

    கடந்த புதன்கிழமை மத்திய மாவட்ட பகுதிகளில் சமையல் காஸ் சிலிண்டர்கள் முறைகேடாக விற்பனை செய்யப்படுவதாகப் போலீஸýக்கு புகார் வந்தது. இதையடுத்து, போலீஸ் உதவி ஆணையர் சுதிர் சக்ஷேனா தலைமையில் ஆய்வாளர் சத்தேந்தர் மோகன், உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழு திடீர் அப் பகுதியில் சோதனை நடத்தியது.

    அப்போது ராஜ்காட் கஞ்சன்புரி காஸ் குடோன் அருகே காஸ் சிலிண்டர்களை விநியோகிக்கும் ஊழியர்களான காசிம் (32), அஜய் (29), ஹிமானுசு (29), ஜிலானி (35), ராம்ப்ரீத் (28), ஹரிராம் (35) ஆகிய 6 பேரும் காஸ் சிலிண்டர்களை முறைகேடாக விற்பனை செய்தது தெரிய வந்தது. இந்த சிலிண்டர்களுக்கு மாற்றாக காலி சிலிண்டர்களை அவர்கள் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 6 பேரும் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    அதிகப் பணம் பெறும் ஆசையில் அவர்கள் கடந்த 7 மாதங்களாக இதுபோன்று விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 24 வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள், 6 வணிகப் பயன்பாட்டு காஸ் சிலிண்டர்கள், இரண்டு எடை இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டன. இது குறித்து தரியாகஞ்ச் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகப் போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai