Enable Javscript for better performance
ஆம்ஆத்மி கட்சியின் அதிருப்தி தலைவர்கள் நாளை கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆம்ஆத்மி கட்சியின் அதிருப்தி தலைவர்கள் நாளை கூட்டம்

    By புது தில்லி,  |   Published on : 05th April 2014 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆம்ஆத்மி கட்சியின் அதிருப்தி தலைவர்களின் கூட்டம் தில்லி ஜந்தர் மந்தரில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அக் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ வினோத் பின்னி வியாழக்கிழமை கூறியது: ஊழலை ஒழிக்கவும், ஊழலுக்கு எதிராகப் போராடவும் ஆம்ஆத்மி கட்சி தொடங்கப்பட்டது. ஆனால், தனியார் நிறுவனம் போல சிலரின் கையில் கட்சி சிக்கியுள்ளது. இதையடுத்து, கட்சி மீது சிலர் அதிருப்தி அடைந்து வருகின்றனர். ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டவர்களுக்குத்தான் மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கட்சியின் 300 தேசிய செயற்குழு உறுப்பினர்களில் 70 பேர் அதிருப்தியாளர்களாக மாறியுள்ளனர். இவர்கள் பங்குபெறும் கூட்டம் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அக் கூட்டத்தில் புதிய தலைமையைத் தேர்ந்தெடுப்போம் என்றார் வினோத் பின்னி.

    பேட்டியின் போது அக் கட்சியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட, தேசிய செயற்குழு உறுப்பினர்களாக இருந்த அஸ்வினி உபாத்யாய, ராஜேஷ் குப்தா ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai