Enable Javscript for better performance
காங்கிரஸ் வேட்பாளர் ராஜ் பப்பர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    காங்கிரஸ் வேட்பாளர் ராஜ் பப்பர் மீது வழக்கு

    By புது தில்லி  |   Published on : 05th April 2014 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தல் விதிகளை மீறியதாக உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜ் பப்பர் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்த விவரம் வருமாறு: காஜியாபாத் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ராஜ் பப்பர். இவர் இத் தொகுதிக்குள்பட்ட மசூரி பகுதியில் வியாழக்கிழமை வீதி வீதியாகப் பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக மாலை 5 மணி வரை காவல் துறையினரிடம் அனுமதி பெற்றிருந்தார். இந் நிலையில், மசூரி காவல் நிலையத்திற்கு உள்பட்ட நஹல் கிராமத்தில் அவர் இரவு 7.30 மணி வரை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் அவர் மீது மசூரி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்தனர்.

    இது குறித்து மசூரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுபோத் கூறுகையில், "திறந்தவெளி ஜீப்பில் பிரசாரம் செய்வதற்கு காங்கிரஸ் வேட்பாளர் ராஜ் பப்பருக்கு வியாழக்கிழமை மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் மாலை 7.30 மணி வரை பிரசாரம் செய்துள்ளார். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகும். இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

    இத் தொகுதிக்குள்பட்ட பிலகுவா பகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாக ராஜ் பப்பர் மீது ஏற்கெனவே ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai