Enable Javscript for better performance
கொலை வழக்கில் 2 இளைஞர்களுக்கு ஆயுள் சிறை- Dinamani

சுடச்சுட

    

    தனது அலுவலகத்தின் முன் புகைப்பிடித்தவர்களைத் திட்டியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரு இளைஞர்களுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

    இரு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இந்த வழக்கு விவரம் வருமாறு: தில்லி ஜஹாங்கீர் புரி பகுதியைச் சேர்ந்தவர் ஜிதேந்தர். இவர் அப் பகுதியில் அலுவலகம் நடத்தி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் சுனில், வினோத். இருவரும், சம்பவத்தன்று ஜிதேந்தரை கத்தியால் குத்தி கொலை செய்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து, இருவரையும் ஜஹாங்கீர் புரி போலீஸார் கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணையின்போது, "29.4.2011-ஆம் தேதி சுனில், வினோத் இருவரும் ஜிதேந்தரின் அலுவலகத்தின் படிக்கட்டில் அமர்ந்து புகைப்பிடித்துக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த ஜிதேந்தர் இருவரையும் கண்டித்தார். இதையடுத்து, இருவரும் அவர் மீது கோபம் கொண்ட அவர்கள் பின்னர் அவரைக் கத்தியால் குத்தினர். இதைப் பார்த்த ஜிதேந்தரின் மைத்துனர் விகாஷ் சௌஹான் கூச்சலிட்டார்.

    இதையடுத்து, இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதில், பலத்த காயமடைந்த ஜிதேந்தர் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர்' என்று அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்

    பட்டது.

    இருதரப்பு வாதங்களுக்குப் பிறகு கூடுதல் செஷன்ஸ் நீதிபதி திக் வினய் சிங் அளித்த தீர்ப்பு: குற்றம்சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றமும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தக் கொலை சம்பவம் அரிதிலும் அரிதான வழக்கின் கீழ் வரவில்லை என்பதைக் குற்றத்தின் தன்மையும் சந்தர்ப்ப சூழலும் எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

    எனவே, குற்றம்சாட்டப்பட்ட சுனில், வினோத் இருவருக்கும் ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்படுகிறது' என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai