Enable Javscript for better performance
கொள்ளை, வழிப்பறி வழக்கில் தேடப்பட்ட 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கொள்ளை, வழிப்பறி வழக்கில் தேடப்பட்ட 3 பேர் கைது

    By புது தில்லி,  |   Published on : 05th April 2014 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த மூன்று பேரை வெவ்வேறு இடங்களில் போலீஸார் கைது செய்தனர்.

    இது குறித்து தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி வியாழக்கிழமை கூறியதாவது:

    தில்லி நஜஃப்கர் பகுதியைச் சேர்ந்தவர் சௌவாப் கட்டாரியா, நரைனா பகுதியைச் சேர்ந்தவர்கள் ரோஹித் தன்வர், ஹிமான்ஷு தன்வர். இவர்கள் மூவரையும் தில்லி நகரில் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த கொள்ளை, வழிப்பறிச் சம்பவங்களில் போலீஸார் தேடி வந்தனர். இந் நிலையில், பாலம் பகுதிக்கு திருட்டு காரில் சௌவாப் கட்டாரியா, ரோஹித் தன்வர் ஆகியோர் வருவதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் காரில் வந்த இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருட்டு மொபைல், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    அதேபோன்று, தில்லி நரைனா சென்ட்ரல் ஸ்கூல் அருகே ஹிமான்ஷு தன்வர் கைது செய்யப்பட்டார்.

    அவரிடமிருந்து திருட்டு மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. மூவரின் கூட்டாளிகளையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai