Enable Javscript for better performance
ஜாதி சான்றிதழ் வழங்க லஞ்சம்: இடைத்தரகர்கள் இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஜாதி சான்றிதழ் வழங்க லஞ்சம்: இடைத்தரகர்கள் இருவர் கைது

    By புது தில்லி,  |   Published on : 05th April 2014 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜாதி சான்றிதழ் வழங்க ரூ. 2,500 லஞ்சம் வாங்கியதாக இடைத்தரகர்கள் போல் செயல்பட்ட இருவரை தில்லி லஞ்ச ஒழிப்புத் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.

    தில்லியைச் சேர்ந்த பெண் தன் மகளுக்கு ஜாதிச் சான்றிதழ் பெற ஷாதராவில் உள்ள வருவாய்த் துறை துணை ஆணையர் அலுவலகத்துக்கு புதன்கிழமை சென்றார். அங்கு இடைத்தரகர்கள் போல செயல்பட்ட சிராஞ்சி லால், ராஜேஷ் குமார் ஆகியோர் ஜாதி சான்றிதழை உடனே பெற வேண்டுமானால் ரூ. 2,500 லஞ்சம் தர வேண்டும் என கேட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையினர் பொறி வைத்து இருவரையும் புதன்கிழமை கைது செய்தனர்.

    இது குறித்து தில்லி லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் ஆணையர் வி. ரங்கநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சம்பந்தப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் அவரிடம் வழங்கப்பட்டது. அப் பணத்தை சிராஞ்சி லால், ராஜேஷ் குமார் ஆகியோரிடம் அப் பெண் வழங்கினார். அப்போது, இருவரையும் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்தனர். லஞ்சப் பணம் ரூ. 2,500, உண்மையான ஜாதி சான்றிதழ்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

    இந்த இருவரும் ஏற்கெனவே பலரிடம், ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்றவற்றை வழங்க லஞ்சம் வாங்கியது தெரியவந்துள்ளது. இருவர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது' என்றார் ரங்கநாதன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai