Enable Javscript for better performance
டி. ராமசாமி பதவிக் காலம் ஏப்.30 வரை நீட்டிப்பு- Dinamani

சுடச்சுட

    

    டி. ராமசாமி பதவிக் காலம் ஏப்.30 வரை நீட்டிப்பு

    By புது தில்லி,  |   Published on : 05th April 2014 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பத்ம பூஷண் விருது பெற்ற மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறைச் செயலரும் அறிவியல் வல்லுநருமான டி. ராமசாமியின் பதவிக் காலத்தை ஏப்ரல் 30-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதற்கான அனுமதியை உயரதிகாரிகள் நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை (ஏசிசி) புதன்கிழமை

    வழங்கியது.

    மத்திய அரசுத் துறைகளின் செயலர் பதவிக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால், அறிவியல் தொழில்நுட்பத் துறைக்கு மட்டும் அத் துறையில் நிபுணத்துவம் மிக்க மூத்த அறிஞர்கள், விஞ்ஞானிகள் நியமக்கப்படுவதை மரபாக மத்திய அரசு கொண்டுள்ளது.

    அந்த வகையில் 2006-ஆம் ஆண்டில் நீர் வளம், அறிவியல் ஆகிய துறைகளில் வல்லுநராக விளங்கும் டி. ராமசாமியை மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறைச் செயலராக அரசு நியமித்தது. அது முதல், பதவியில் இருந்து ஓய்வு பெறும் வயதை எட்டிய பிறகும் தகுதியான நபர் செயலர் பதவிக்குக் கிடைக்காததால் மூன்று முறை ராமசாமியின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது. அவருக்கு அடுத்தபடியாக செயலர் பதவி வகிக்க தகுதி வாய்ந்த நபரை தேர்வு செய்ய தேர்வுக் குழு முயற்சி எடுத்தது. இக் குழுவில் டி.ராமசாமி,விஞ்ஞானிகள் சி.என். ராவ், கோவர்தன மேத்தா, எம்.கே. பன் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். ஆனால், தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் இப்பதவியை வகிக்க பல்வேறு துறைகளில் பணியாற்றும் அறிஞர்கள், விஞ்ஞானிகள் முன்வரவில்லை.

    இந்நிலையில், கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் பதவிக் காலம் நிறைவடைந்த ராமசாமிக்கு ஏப்ரல் 30-ஆம் தேதி வரை பதவி நீட்டிப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இக் காலகட்டத்துக்குள் புதிய செயலரைத் தேர்வு செய்வதில் தேர்வுக் குழு தீவிரம் காட்டும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai