Enable Javscript for better performance
தலித்துகளை ஏமாற்றி வருகிறது காங்கிரஸ்: பாஜக தாக்கு- Dinamani

சுடச்சுட

    

    தலித்துகளை ஏமாற்றி வருகிறது காங்கிரஸ்: பாஜக தாக்கு

    By புது தில்லி,  |   Published on : 05th April 2014 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தலித்துகளை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஏமாற்றி வருகிறது என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

    சாந்தினி செüக் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஆனந்த் பர்வத்தையடுத்த "நயி பஸ்தி'- இல் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தலித் மாநாட்டில் பங்கேற்று பிரதேச பாஜக தலைவரும், இத் தொகுதி வேட்பாளருமான ஹர்ஷ் வர்தன் பேசுகையில் இதைத் தெரிவித்தார்.

    தலித்துகளுக்கு உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அவர்கள் வசிக்கும் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் உள்ளன. பாஜக வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமையும்போது தலித்துகளுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் ஹர்ஷ் வர்தன் கூறினார்.

    ஷாலிமார் பாக், மாடல் டவுன், குஜ்ராவாலா டவுன், ரோஷனாரா கிளப் ஆகிய பகுதிகளிலும், சதர் பஜார், பல்லிமரான் சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அவர் பிரசாரம் மேற்கொண்டார். தில்லி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் ஜெய் பிரகாஷ், மோதி லால் சோதி, ஈத்கா மண்டல பாஜக தலைவர் தீபக் அத்வால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai