Enable Javscript for better performance
தலைநகரில் நாளை காங்கிரஸ் பொதுக்கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டம் தக்ஷிணபுரியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) நடைபெறவுள்ளது. அதில் அக் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசுகிறார்.

    இது குறித்து அக் கட்சியின் பிரதேச செய்தித் தொடர்பாளர் முகேஷ் சர்மா வெள்ளிக்கிழமை கூறுகையில், "தெற்கு தில்லி, தக்ஷிணபுரி, அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் (விராட் சினிமா அருகில்) ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கும் இக் கூட்டத்தை சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளோம். ஏற்பாடுகளைக் கவனிக்கும் பணியில் சுமார் 3 ஆயிரம் தொண்டர்கள் ஈடுபடுவார்கள். விராட் சினிமா பகுதியைச் சுற்றியுள்ள தேவ்லி, சங்கம் விஹார், அம்பேத்கர் நகர், சத்தர்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai