Enable Javscript for better performance
தார்மிக வாக்களிப்பை உறுதிப்படுத்துவது அவசியம்- Dinamani

சுடச்சுட

    

    தார்மிக வாக்களிப்பை உறுதிப்படுத்துவது அவசியம்

    By புது தில்லி,  |   Published on : 05th April 2014 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தார்மிக வாக்களிப்பை உறுதிப்படுத்தவும், வாக்களிக்கவும் இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும் என்று தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி விஜய் தேவ் கேட்டுக் கொண்டார்.

    வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி தில்லி தயாள் சிங் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் விஜய் தேவ் கலந்து கொண்டு பேசியதாவது:

    "நமது வாக்குகள் விற்பனைக்கல்ல' என்பதை அனைத்து அரசியல்வாதிகளுக்கும், கட்சிகளுக்கும் நாம் தெளிவுபடுத்த வேண்டும். எந்த பிரதிபலனை எதிர்பார்த்தும் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்கப்பதில்லை என்பதை இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும். இதுதான் தார்மிக வாக்களிப்பின் நோக்கம்.

    பணத்துக்காகவும், மதுபாட்டில்களுக்காகவும் வாக்குகள் விற்கப்பட்டது குறித்தெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இதைவிட ஒரு துரதிருஷ்டம் ஏதும் இருக்க முடியாது. வாக்குப்பதிவு நடைமுறையை நாம் நன்கு அறிந்திருக்க வேண்டியது அவசியம். வாக்களிப்பதற்கு முன்பு நமது மனதில் சிந்தனைகள் உருவாக வேண்டும். இது ஏதாவது ஒன்றாக இருக்கக் கூடாது.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. இதை இளைஞர்கள் தாங்கள் தெரிந்து கொள்வது மட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், தங்களைச் சுற்றியுள்ள மக்கள் அறியுமாறும் செய்ய வேண்டும். தில்லியில் தேர்தல் பணிகளை மேற்கொள்வது ஒரு பெரிய பணி. நாட்டின் தலைநகர்வாசிகளாக இருப்பதால், தரத்தை உருவாக்குவதில் நமக்கு பொறுப்பு உள்ளது. இது நாட்டுக்கு மட்டுமின்றி சர்வதேச அளவில்கூட முக்கியமாகிறது. தேர்தல் வெற்றி என்பது நியாயமாக தேர்தலை நடத்துவதை உறுதிப்படுத்துவது மட்டும் அல்ல. மாறாக, அதிகபட்ச அளவில் வாக்குகள் பதிவாவதையும் உறுதிப்படுத்துவதாகும் என்றார் விஜய் தேவ்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai