Enable Javscript for better performance
தில்லி தமிழ்ச் சங்கத்தில் ஏப்ரல் மாத நிகழ்ச்சிகள்- Dinamani

சுடச்சுட

    

    தில்லி தமிழ்ச் சங்கத்தில் ஏப்ரல் மாத நிகழ்ச்சிகள்

    By புது தில்லி  |   Published on : 05th April 2014 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி தமிழ்ச் சங்கத்தில் இம் மாதம் தமிழிசை, பரதநாட்டியம், சிறப்புப் பட்டிமன்றம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    அதன்படி, தில்லி தமிழ்ச் சங்க அரங்கில் தேதி வாரியாக நடைபெறும் நிகழ்ச்சிகள் விவரம்:

    ஏப்ரல் 5: மாலை 6.30 மணிக்கு ஏ.ஸ்ருதி ஐயர் குழுவினர் வழங்கும் தமிழிசை நிகழ்ச்சி.

    ஏப்ரல் 6: மாலை 6 மணிக்கு ஏ.டி. வைஷாலி குழுவினர் வழங்கும் தமிழிசை நிகழ்ச்சி.

    இரவு 7.30 மணிக்கு எஸ். சுகன்யா வழங்கும் பரதநாட்டியம்.

    ஏப்ரல் 8: மாலை 6.30 மணிக்கு சங்கத்தின் பயிலரங்க குழு குரு கலைவாணியின் மாணவ, மாணவிகள் பங்குபெறும் ஆண்டு விழா- பரத நாட்டிய நிகழ்ச்சி.

    ஏப்ரல் 12: சித்திரைத் திருவிழா- 2014, மாலை 6.30 மணிக்கு திரைப்பட நடிகர் மதன் பாப் வழங்கும் "நெஞ்சம் மறப்பதில்லை' மதன் உத்ஸவ் மெல்லிசை நிகழ்ச்சி.

    ஏப்ரல் 13: மாலை 6.30 மணிக்கு, "திருமண வாழ்வில் வெற்றி தருவது காதல் திருமணமா? பெரியோர் நிச்சயிக்கும் திருமணமா? என்ற தலைப்பில் ப.அறிவழகன் நடுவராகப் பங்கேற்கும் சிறப்புப் பட்டிமன்றம்.

    ஏப்ரல் 14: மாலை 6.30 மணிக்கு கலைவாணி கணேஷ் குழுவினர் வழங்கும் தமிழிசை நிகழ்ச்சி.

    ஏப்ரல் 20: மாலை 6.30 மணிக்கு உமா பாலசுப்ரமணியம் வழங்கும் பரதநாட்டியம்.

    இத் தகவலை தில்லி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் எம்.என். கிருஷ்ணமணி, பொதுச் செயலர் இரா. முகுந்தன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai