Enable Javscript for better performance
தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு: இமாம்- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்போம் என்று தில்லி ஜாமா மசூதியின் தலைமை "இமாம்' சையது அகமது புகாரி அறிவித்தார்.

    இது தொடர்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

    "மதவாத சக்திகளிடமிருந்து தேசத்தைக் காக்க மதச்சார்பற்றவர்களின் வாக்குகள் சிதறாமல் இருப்பது அவசியம். அதைக் கருத்தில் கொண்டு மதச்சார்பற்ற சக்திகளை ஆதரிப்பது அவசியமாகும். இச் சூழலில் முஸ்லிம்களின் கோரிக்கைகளை காங்கிரஸ் நிறைவேற்றும் என நம்புகிறேன். அண்மையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தேன். காங்கிரஸ் மீது முஸ்லிம்களுக்கு சில மனக்குறைகள் இருந்தாலும், தேசத்தைப் பிளவுபடுத்த மதவாத சக்திகள் முற்படும்போது, அம் முயற்சியைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆகவே, அந்த நோக்கத்துடன் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸýக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளோம்.

    மேற்கு வங்கத்தில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு பல்வேறு நலத் திட்டங்களை மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு செய்து வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருவதில்லை என்றும் அக் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி தெளிவுபடுத்தியுள்ளார். ஆகவே, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸýக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளோம்.

    இதேபோல், பிகாரில் காங்கிரஸýடன் கூட்டணி அமைத்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். காங்கிரஸýக்கு ஆதரவு தரும்படி முஸ்லிம்களுக்கு நாங்கள் கோரிக்கை மட்டுமே வைக்கிறோம். இது மதக் கட்டளை (ஃபத்வா) அல்ல.

    இந்தியா விடுதலை பெற்று 65 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், முஸ்லிம்களின் நலன்களைக் காக்க எந்தக் கட்சியும் முழு ஈடுபாடு காட்டவில்லை. அகாலி, யாதவ் சமூகத்தினருக்கு இருப்பது போல முஸ்லிம்களுக்கும் ஒரே கட்சி இருந்திருந்தால் இந் நிலைக்கு ஆளாகியிருக்கமாட்டோம்.

    உத்தர பிரதேச தேர்தலில் முஸ்லிம்களுக்கு அளித்த வாக்குறுதியை சமாஜவாதி கட்சி நிறைவேற்றவில்லை. அந்த மாநில அரசு முசாஃபர்நகர் கலவரத்தை தடுக்கவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி சந்தர்ப்பவாதத்துடன் செயல்படுகிறது. இது போன்ற மாநில அளவிலான கட்சிகளை ஆதரிப்பது வாக்குகளை வீணடிப்பதற்கு சமம் என்றார் சையது அகமது புகாரி.

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தில்லி ஜாமா மசூதி தலைமை இமாம் சையது அகமது புகாரி சில நாள்களுக்கு முன்னர் சந்தித்தார்.

    இந்த சந்திப்பை பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். மேலும், மதத்தின் பெயரால் வாக்குகளைக் கவர சோனியா முயல்வதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்

    தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai