பஸ் நிறுத்தத்தில் பையில் தலையில்லா பெண் சடலம்
By புது தில்லி, | Published on : 05th April 2014 12:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மேற்கு தில்லி, ஜனக்புரியில் பஸ் நிறுத்தத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் தலையில்லா பெண் சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.
இது குறித்து போலீஸார் கூறியது: ஜனக்புரியில் பஸ் நிறுத்தத்தில் பை ஒன்று கிடப்பதாக பயணி ஒருவர் வியாழக்கிழமை இரவு 11 மணி அளவில் போலீஸýக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, போலீஸார் விரைந்து சென்று அப் பையை கைப்பற்றினர். அதில் தலையில்லாத பெண் உடல் நிர்வாணமான நிலையில் பிளாஸ்டிக் பேப்பரால் சுற்றப்பட்டு பையினுள் வைக்கப்பட்டிருந்தது. சுமார் 30 வயது மதிக்கத்தக்க அப் பெண் உடலில் எந்தக் காயமும் இல்லை.
முதல் கட்ட விசாரணையில் அப் பெண் கொலை செய்யப்பட்டு, சடலத்தை பையில் கட்டி பஸ் நிறுத்தத்தில் வைத்துவிட்டுச் சென்றுள்ளது தெரிய வந்தது. ஆனால், அப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சடலம் பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் தெரியவில்லை. தலைப்பகுதி கூர்மையான ஆயுதத்தால் வெட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.