Enable Javscript for better performance
\\\"பாஜக வேட்பாளர் குற்றச்சாட்டு அடிப்படையற்றது\\\' - Dinamani

சுடச்சுட

    

    "பாஜக வேட்பாளர் குற்றச்சாட்டு அடிப்படையற்றது'

    By புது தில்லி,  |   Published on : 05th April 2014 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    "எனக்கு எதிராக பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரி கூறிவரும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது' என்று தெற்கு தில்லி தொகுதி ஆம்ஆத்மி வேட்பாளர் தேவேந்தர் ஷெராவத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ராணுவப் பணிக்குப் பிறகு, கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் ஆமதாபாத் ஐஐஎம்மில் மேலாண்மை படித்தேன். இதைத் தொடர்ந்து, "பிக் எஃப்எம்' என்ற தனியார் பண்பலை வானொலியில் 2007-ஆம் ஆண்டு நவம்பரில் வேலைக்குச் சேர்ந்தேன். ஆனால், அந்த வேலையில் ஓராண்டுகூட தொடரவில்லை. அதைத் தொடர்ந்து விவசாயிகள் மத்தியில் சமூகப் பணியாற்றி, அவர்களின் உரிமைகளுக்காக தகவல் அறியும் உரிமை சட்டம், பத்திரிகை ஆகியன வாயிலாக போராடி வருகிறேன். விவசாயிகள், மக்களுக்கு எதிரான ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் செயல்பாடுகளை கடந்த காலத்தில் ஆதரித்தது கிடையாது. எதிர்காலத்திலும் ஆதரிக்க மாட்டேன். கொள்கைகளின் அடிப்படையில் தேர்தலைச் சந்திப்பதை விட்டுவிட்டு அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரி அடுக்கிவருகிறார் என்று அதில் தெரிவித்துள்ளார்.

    தெற்கு தில்லி மக்களவை தொகுதி ஆம்ஆத்மி வேட்பாளர் தேவேந்தர் ஷெராவத் ரிலையன்ஸ் நிறுவன ஆதரவுடன் போட்டியிடுகிறார் என்று பிரசாரத்தின்போது பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரி தெரிவித்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai