Enable Javscript for better performance
மகாராஷ்டிரம், உ.பி., தில்லியில் பாஜக அமோக வெற்றி பெறும்- Dinamani

சுடச்சுட

    

    மகாராஷ்டிரம், உ.பி., தில்லியில் பாஜக அமோக வெற்றி பெறும்

    By புது தில்லி  |   Published on : 05th April 2014 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், தில்லி, பிகார் ஆகிய மாநிலங்களில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று வெவ்வெறு அமைப்புகள் நடத்திய கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

    என்.டி.டி.வி. தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில், மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பாஜக - சிவசேனை கூட்டணிக்கு 36 இடங்கள் கிடைக்கும் என்றும் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 10 இடங்கள் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

    தில்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 4 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 2 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி ஓரிடத்திலும் வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது.

    பிகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக கூட்டணி 21 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இதன்படி, கடந்த தேர்தலை விட பாஜக கூட்டணிக்கு 9 இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் 6 இடங்களிலும், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 11 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக அந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் சி.என்.என். - ஐ.பி.என். தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜக கூட்டணி 42 முதல் 50 தொகுதிகளில் வெற்றி பெறலாம் எனத் தெரியவந்துள்ளது.

    சமாஜவாதி கட்சிக்கு 11 முதல் 17 இடங்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 10 முதல் 16 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 4 முதல் 8 இடங்களும் கிடைக்கும் என்று அந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai