Enable Javscript for better performance
\\\"அரசுப் பணியில் இருந்தபோது கேஜரிவால் ஊழல் செய்தார்- Dinamani

சுடச்சுட

    

    "அரசுப் பணியில் இருந்தபோது கேஜரிவால் ஊழல் செய்தார்

    By புது தில்லி  |   Published on : 06th April 2014 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசுப் பணியில் இருந்தபோது அரவிந்த் கேஜரிவால், தொண்டு நிறுவனம் தொடங்கி ஊழலில் ஈடுபட்டார்' என்று வடமேற்கு தில்லி தொகுதி பாஜக வேட்பாளர் உதித் ராஜ் தெரிவித்தார்.

    இது குறித்து சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கேஜரிவால், மத்திய வருவாய் துறையில் பணியாற்றிவந்தார். அப்போது தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி பல்வேறு அமைப்புகளிடம் இருந்து நன்கொடை வசூலித்து வந்தார். அதில் பல ஊழல்கள் நடந்துள்ளன. இது சட்டவிரோதம் மற்றும் மோசடியில் ஈடுபடும் செயலாகும்.

    நாடு முழுவதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், மத்திய வருவாய் துறையில் பணியாற்றியபோது கேஜரிவால், எந்த ஊழல், முறைகேடுகளையும் கண்டுபிடிக்கவில்லை.

    அரசின் சம்பளத்தையும் பெற்றுக் கொண்டு, ஊழலில் ஈடுபட்டு வந்தார். அவர் தொண்டு நிறுவனம் தொடங்கி, ஃபோர்டு பவுண்டேஷன் மூலம் நன்கொடை பெற்று வந்தார். இந்த அமைப்புக்கு அமெரிக்காவின் உளவு நிறுவனமான சிஐஏ (சென்ட்ரல் இன்டெலிஜன்ஸ் ஏஜென்ஸி) உதவிவருகிறது. இது நம் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும். இதுகுறித்து கேஜரிவாலுடன் நேருக்குநேர் விவாதிக்க தயாராக உள்ளேன். அவர் கட்சியில் உள்ள ஊழல் கறையை முதலில் துடைக்க வேண்டும்.

    அதேபோல் காங்கிரஸ் வேட்பாளரும், மத்திய அமைச்சருமான கிருஷ்ணா தீரத், தொகுதிக்கு தான் செய்த சாதனைகளை கூற முடியாததால் மக்களிடையே வகுப்புவாத மோதல்களை உருவாக்கி வருகிறார் என்றார் உதித் ராஜ்.

    மக்களவைத் தேர்தலையொட்டி பாஜகவுக்கு வாக்களிக்க கோரி முகமதுபூர், பாக்டவாபூர், பல்லா கிராமம், திகிபூர், ஹமீர்பூர், சிந்துகெüன், ஜேஜே காலனி உள்ளிட்ட பல இடங்களில் உதித் ராஜ் பிரசாரம் மேற்கொண்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai