Enable Javscript for better performance
ஆர்டிஓ அலுவலகத்தில் 22 கம்ப்யூட்டர்கள் கொள்ளை- Dinamani

சுடச்சுட

    

    ஆர்டிஓ அலுவலகத்தில் 22 கம்ப்யூட்டர்கள் கொள்ளை

    By புது தில்லி  |   Published on : 06th April 2014 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி அருகே லோனி எல்லைப் பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்டிஓ) ஆயுதம் தாங்கிய கொள்ளையர் புகுந்து 22 கம்ப்யூட்டர்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அந்த அலுவலகத்தில் வாகன உரிமம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் ஸ்தம்பித்தது.

    இது குறித்து போலீஸார் கூறியது: அந்த அலுவலகத்தில் காவல் பணிக்கு காவலாளி நியமிக்கப்பட்டிருந்தார். அவர் புதன்கிழமை இரவுப் பணியில் இருந்தபோது அதிகாலை 3 மணியளவில் மூவர் கொண்ட கும்பல் வந்தது. அதில் ஒருவர் காவலாளியை பிடித்துக் கொண்டார். மற்ற இருவரும் அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு உரிமம் வழங்கும் பிரிவில் இருந்த 22 கம்ப்யூட்டர்களை எடுத்துக் கொண்டு அனைவரும் தப்பிச் சென்றனர்.

    அவர்களின் வருகை அந்த வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கும் என்பதை அறிந்து, அதன் டிஜிடல் விடியோ ரெக்கார்டரையும் (டிவிஆர்) அவர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர். இது குறித்து காவலாளி, ரோந்துப் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். இது தொடர்பாக வடகிழக்கு மாவட்டத்தில் உள்ள ஜோதி நகர் காவல் நிலையத்தில் கொள்ளை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், தனிப் படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai